விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ‘குஷி’ திரைப்படத்திற்குப் பிறகு, சமந்தா தெலுங்கில் தானே தயாரித்த ‘சுபம்’ என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் (கெஸ்ட் ரோல்) நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் தொடர்ந்து வெப் சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஏற்கனவே தன்னை வைத்து ‘ஓ பேபி’ திரைப்படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இயக்கத்தில் ‘மா இண்டி பங்காரம்’ என்ற புதிய படத்தை தயாரித்து, அதில் கதையின் நாயகியாக நடிக்கப் போவதாக சமந்தா அறிவித்திருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
அவர் கூறியதுபோலவே, நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகும் அந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. இதில் சமந்தா பங்கேற்று நடித்து வருகிறார். இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

