Monday, November 25, 2024

எம்ஜிஆர் – ரஜினிகாந்த் இடையே கருத்து வேறுபாடு என வதந்திகள் பரப்பினர்… தமிழக முன்னாள் முதல்வர் ஜானகி அம்மாவின் நூற்றாண்டு விழாவில் ரஜினி டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மக்கள் திலகம் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாவின் நூற்றாண்டு விழா நேற்று இரவு அதிமுகவினரால் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதேசமயம், நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொள்ள முடியாத நடிகர் ரஜினிகாந்த், வீடியோ மூலமாக தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோவில், ஜானகி அம்மையாருடனான சந்திப்புகள் மற்றும் அவருடைய நினைவுகளை அவர் விளக்கினார்.

அந்த உரையில், ரஜினிகாந்த் கூறியதாவது: “ஜானகி அம்மாவை மூன்று முறை சந்தித்துள்ளேன். எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகி அம்மா அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த காலகட்டத்தில், ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் வீட்டின் அருகே நான் ஒரு படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தேன். அப்போது ஜானகி அம்மா என்னை சந்திக்க விரும்புவதாக கூறினார். நான் அவரை நேரில் சந்திக்க சென்றேன். அப்போது, அவர் தனது கையாலேயே எனக்கு காபி தாந்தார்.

அதே நேரத்தில், ‘ராகவேந்திரா’ படம் வெளியான போது, அதை எம்ஜிஆர் பார்த்து விட்டு 15 நிமிடங்கள் உங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார் என்று ஜானகி அம்மா கூறினார். அவர் சொன்னதாவது: “ரஜினி மிகவும் அமைதியாகவும் அழகாகவும் நடித்திருக்கிறார். அதை பார்க்கவே நன்றாக இருக்கிறது. ஆனால் பல படங்களில் சிகரெட் பிடிக்கிறார். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களும் அதை பார்த்து அந்த பழக்கத்தை தொடர்கிறார்கள். இது ரஜினி விட்டுவிட்டால் மிகவும் நல்லது. நேரம் கிடைக்கும் போது அவரிடம் சொல்ல முயற்சிக்கிறேன்,” என்று எம்ஜிஆர் சொன்னதாக ஜானகி அம்மா தெரிவித்தார்,” என்று ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார்.

எம்ஜிஆர் மற்றும் ரஜினிகாந்த் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக பலர் வதந்திகள் பரப்பியிருந்தபோதிலும், எம்ஜிஆர் ரஜினி மீது கொண்ட அக்கறையை ஜானகி அம்மா கூறியதன் மூலமாகவும், ரஜினி அதை வெளிப்படையாக பகிர்ந்ததன் மூலமாகவும், உண்மையான உறவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News