Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

 விமர்சனம்: ருத்ரன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பெற்றோருடன் ஒரே மகனாக மகிழ்ச்சியுடன் வசிக்கிறார் ராகவா லாரன்ஸ். இந்த நிலையில் எதேச்சையாக அவர் சந்திக்கும் பிரியா பவானி சங்கருக்கும் காதல் மலர்கிறது. அந்தக் காதல் திருமணம் வரை செல்கிறது. அந்த சமயம் ஒரு கடன் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் இவரது தந்தை நாசர் இறந்து விட, அந்தக் கடன்களை அடைக்க வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்கிறார் ராகவா லாரன்ஸ்.

இதற்கிடையே இதுபோல் குடும்பத்தை இந்த ஊரிலேயே விட்டுவிட்டு வெளிநாடு செல்லும் நபர்களின் சொத்துக்களை வில்லன் சரத்குமாரின் கும்பல் அபகரித்துவிட்டு வயதானவர்களை போட்டுத் தள்ளி விடுகிறது. அந்த வகையில் வில்லன் சரத்குமார் அண்ட் டீம் ராகவா லாரன்ஸ் குடும்பத்தையும் கொன்றுவிடுகிறது. இதைத் தெரிந்து கொண்ட ராகவா லாரன்ஸ் எப்படி அவர்களை பழி தீர்த்திருக்கிறார் என்பதே இப்படத்தின் மீதி கதை.

அரதப்பழசான   கதையை அரதப்பழசான ஒரு திரைக்கதையில் கொடுத்து சோர்வடையச் செய்திருக்கிறார்கள். பட துவக்கத்தில்  ஒரு சண்டைக் காட்சி, ஒரு அறிமுக பாடல், அடுத்து ஃபேமிலி சென்டிமென்ட்,  காதல் காட்சி.. மீண்டும் ஆக்சன், சென்டிமென்ட், ஆக்சன் என பழைய திரைக்கதை.

இதை ரசிக்கும்படி கொடுத்திருந்தால் கூட பரவாயில்லை.

ராகவா லாரன்ஸ் வழக்கமான நடிப்பு, அதே பாணி டான்ஸ் சென்டிமென்ட் பாடல்கள், ஃபைட்!

நாயகி ப்ரியா பவானி சங்கர், எப்போதும்போல்!

நாயகனின் நண்பனாக வரும் காளி வெங்கட், அம்மா பூர்ணிமா அப்பா நாசர்,  போலீசாக வரும் இளவரசு ஆகியோர் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடாத பாட்டெல்லாம் ரீமிக்ஸ் பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. . சாம் சிஎஸ்-ன் பின்னணி இசை இரைச்சல்.

ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு அருமை.

நாம் எளிதில் யூகிக்கக்கூடிய லாஜிக் மீறல்கள் நிறைந்த அரதப் பழசான திரைக்கதை. ஆகவே போரடிக்கிறது.

 

- Advertisement -

Read more

Local News