ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் மனசெல்லாம் தொடரில் காதல் பட நடிகை சந்தியா, சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இதனால், மனசெல்லாம் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.சிறப்புத் தோற்றத்தில் சந்தியா நடிக்கவுள்ளதால், இந்த தொடரில் திருப்பங்கள் ஏற்படலாம் என்றும், இதனால் டிஆர்பி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2.30 மணிக்கு மனசெல்லாம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
