நாய் பொம்மை ஒன்றுக்குள் இருக்கும் பேய், சாதி மாறி காதலிக்கும் இளைகள்களை கொலை செய்து வருகிறது. கதை நாயகன் ராஜூவின் நண்பனும் அப்படி கொல்லப்படுகிறான். இதற்கிடையே, ராஜூவும் வேறு சாதிப் பெண்ணை காதலிக்கிறான். பிறகு என்ன ஆகிறது என்பதுதான் கதை.
கதாநாயகன் ‘மாஸ்டர்’ மகேந்திரன், நண்பர்களாக வரும் மாரி, நோபிள் ஜேம்ஸ் ஆகியோருக்குத்தான் அதிக முக்கியத்துவம். மூவருமே சிரிக்கவைக்க முயற்சித்து எரிச்சலூட்டுகிறார்கள்.
நாகியாக ஆரத்தி பொடிக்கு பொடி அளவுகூட வாய்ப்பு இல்லை.
பேயாக வரும் ஶ்ரீனி, இன்ஸ்பெக்டராக வரும் செல்லா, ‘உண்மை காதலன்’ கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஆகியோர் மட்டும் ரசிக்கவைக்கிறார்கள்.
இசையமைப்பாளர் திவாகர தியாகராஜன், ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். வாழ்த்துகள்.
சாதி பிரச்னை, பாலியல் வன்கொடுமை என ஏகத்துக்கு மெஸேஜ் சொல்ல நினைத்து எதையும் சரியாக சொல்லமுடியாமல் திண்டாடி இருக்கிறார்கள்.
எரிச்சலூட்டும் காமெடி, அலுப்பூட்டும் திரைக்கதை.. இயக்குநர் அருண் கார்த்திக் கூடுதல் கவனம் எடுத்து படத்தை உருவாக்கி இருக்க வேண்டும்.
அடுத்த முறை அப்படி சிறப்பான படத்தை அளிக்கட்டும்.