தந்தை – மகன் பாசத்தை உருக்கமாக சொல்லும் படம்.
சிவ பிரசாத் யானாலா இயக்கத்தில் சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், அனசுயா பரத்வாஜ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வீரய்யா ஒரு மாற்றுத்திறனாளி, பின்தங்கிய பகுதி ஒன்றில் கட்டணக்கழிப்பிட பொறுப்பாளராக இருக்கிறார். அவரது மகன் சிறுவன் ராஜுவின் மகிழ்ச்சி அவருக்கு மிகவும் முக்கியமானது. சிறுவன் ராஜுவுக்கு விமானத்தில் பறக்க வேண்டும் என்பது ஆசை. இதற்கிடையே புற்று நோய் காரணமாக விரைவில் இறந்துவிடுவான் என்பது அவனது தந்தைக்குத் தெரிந்துவிடுகிறது. அதன் பிறகு என்ன ஆகிறது என்பதுதான் கதை.
வீரய்யாவாக வரும் சமுத்திரகனி வழக்கம் போல் சிறப்பாக நடித்து உள்ளார். மகன் மீது காட்டும் பாசம், அவனது ஆசையை நிறைவேற்ற முடியா விரக்தி என தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.
சிறுவன் ராஜூவாக வரும் துருவன் சிறப்பாக நடித்து உள்ளான்.
விபச்சார தொழில் செய்யும் சுமதியாக வரும் அனசுயா, செருப்புத் தொழிலாளி கோட்டியாக வரும் ராகுல் ராமகிருஷ்ணா, ஆட்டோ டிரைவர் டேனியலாக வரும் தன்ராஜ் என அனைவறும் சிறப்பாக நடித்து உள்ளனர்.
ஒளிப்பதிவு, இசை ஆகியன படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
படத்தின் ப்ளஸ் :
சமுத்திரக்கனி மற்றும் மாஸ்டர் துருவன் நடிப்பு
வசனம்
இசை
ஒளிப்பதிவு
படத்தின் மைனஸ் :
திரும்பத் திரும்ப வரும் காட்சிகளுடன் மெலோடிராமாடிக் திரைக்கதை
இரண்டாம் பாதியில் சலிப்பூட்டும் காட்சிகள்
நகைச்சுவை காட்சிகள்
நாடகத்தனமான கிளைமாக்ஸ்