உணர்வு ரீதியாக மனதில் பாதிப்பை ஏற்படுத்துவதே பிரம்மாண்டமான படம் என்பதைச் சொல்லும் படங்களில் வரிசையில் வந்திருக்கிறது பம்பர்.
வெட்டியாய் ஊர்சுற்றும் இளைஞன், ஒரு டிக்கெட் வாங்கிகுறான். அதை அங்கேயே தொலைத்து விடுகிறான். டிக்கெட்டை, வியாபாரி எடுத்து வைக்கிறார். அதற்கு 10 கோடி ரூபாய் பரிசு கிடைக்கிறது. அதன் பிறகான சம்பவங்கள்தான் கதை.
நாயகன் வெற்றி உடல் மொழி, பேச்சு எல்லாவற்றிலும், அப்படியே தூக்குக்குடி இளைஞனை வெளிப்படுத்துகிறார். ஆரம்பத்தில் லாட்டரி வியாபாரியை மதிக்காமல் இருப்பது, அவரது மனம் உணர்ந்து நெகிழ்வது, லாட்டரி பணம் பறிபோய்விடுமோ என பதறுவது.. சிறப்பான நடிப்பு.
படத்தின் இன்னொரு ஹீரோ, ஹரீஷ் பெராடி. அவரது நிதானமான பேச்சு – நடை.. ஆகா.
ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி, இசையமை்பாளர்
கோவிந்த வசந்தா, பன்னணி இசையமைப்பாளற் ‘மசாலா கஃபே’ கிருஷ்ணா அனைவரும் படத்துக்கு பலம்.
பணத்தைவிட மனிதநேயமே சிறந்தது என்பதை இயல்பாக அழகாக சொல்லி இருக்கும் படம்.