விஜயகுமார் இயக்கத்தில் லியோ சிவகுமார் – சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடித்திருக்கும் படம், அழகிய கண்ணே.
கிராமத்தில் எதிரெதிர் வீடுகளில் வசிக்கும் நாயகன், நாயகி காதலிக்கிறார்கள். நாயகன் திரைப்பட இயக்குநராகும் கனவில் சென்னை செல்கிறார். நாயகியும் ஐ.டி. நிறுவனத்தில் வேலை கிடைத்து அங்கே செல்கிறார். திருமணம் செய்துகொள்கிறார்கள். கலப்பு திருமணம், சிலரை உறுத்துகிறது. பிறகு என்ன ஆகிறது என்பதுதான் கதை.
லியோ சிவகுமார், முடிந்தவரை இயல்பாக நடிக்க முயற்சித்து இருக்கிறார். முதல் படம் என்கிற அளவில் பரவாயில்லை. ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டி, முந்தைய படங்களைவிட இதில் சிறப்பாகவே நடித்து உள்ளார்.
நாயகனின் நண்பர்களாக வருபவர்கள் உட்பல பலரது நடிப்பும் செயற்கையாக உள்ளது மைனஸ். இயல்பாக நடித்து சிரிக்கவைக்கும் வித்தைக்காரரான சிங்கம்புலியை கூடுதலாக பயன்படுத்தி இருக்கலாம்.
இயக்குநராகவே வரும் பிரபு சாலமன், நடிகராகவே வரும் விஜய் சேதுபதி படத்துக்கு பலம்.
ஒளிப்பதிவு, இசை ஓகே ரகம்.
கதை அலைபாய்கிறது. நாயகனின் காதலா, சமூகப்போராட்டமா, திரைப்பட இயக்குநராவதா, கணவன் மனைவி பிரச்சினை கதையோ, சாதி பிரச்சினையா… மாறி மாறி பயணிக்கிறது திரைக்கதை.