தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வந்த சுகன்யா, கடந்த 2002-ம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பரை திருமணம் செய்துகொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் touringtalkies யு டியுப் சேனலுக்கு அவர் பேட்டி அளித்தார்.
அவரை பேட்டி கண்ட நடிகரும் பத்திரிகையாளருமான சித்ராலட்சுமணன், “திருமணமாகி ஒரு வருடத்தில் பிரிந்துவிட்டது துரதிஷ்டவசமானது. இதை பற்றி என்ன சொல்கிறீர்கள்” என்று கேட்டார்.
அதற்கு சுகன்யா, “பிடித்திருந்தால் சேர்ந்து வாழலாம் இல்லை என்றால் அவரவர் அவரவர் வேலையை பார்த்துக்கொள்ளலாம். இருவரும் மனம் ஒப்புக்கொண்டு பிரிந்தால் சரி. இல்லை என்றால் கோர்ட்க்கு சென்றுதான் ஆக வேண்டும். அக்கம் பக்கத்தினர் என்ன சொல்வார்கள் என்று யோசிக்க கூடாது. பெண்கள் தைரியமாக முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.
மேலும்,” மறுமணம் குறித்து நான் இதுவரை யோசிக்கவில்லை. அதே சமயம் அதை வேண்டாம் என்றும் சொல்லவில்லை. தற்போது எனக்கு 50 வயது ஆகிறது. இனிமேல் திருமணமாகி குழந்தை பிறந்து அந்த குழந்தை என்னை அம்மா என்று கூப்பிடுமா அல்லது பாட்டி என்று கூப்பிடுமா? எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது கண்டிப்பாக நடக்கும்” என்று சுகன்யா பதில் அளித்தார்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more