நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரிக்க அறிமுக இயக்குனர் பானு போகவரபு இப்படத்தை இயக்கி இருக்கிறார்.
இதில் ரவி தேஜா கதாநாயகனாக நடித்திருக்கிறார். ‘தமாகா’ படத்திற்கு பிறகு மீண்டும் ரவி தேஜா – ஸ்ரீலீலா இணைந்து இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
இப்படம் விநாயகர் சதுர்த்தியைமுன்னிட்டு வருகிற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான ‘து மேரா லவ்வர்’ வெளியாகி இணையத்தில் வைரலானநிலையில், தற்போது புதிய பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது . இப்பாடலில் ஸ்ரீ லீலா மற்றும் ரவி தேஜா ஆகியோரின் நடனம் ரசிகர்களை கவர்ந்து.