தமிழ் திரையுலகில், கருப்பு எம்ஜிஆர் என்று புகழப்படுபவரம், கேப்டன் விஜயகாந்த். உதவி என்று கேட்டு வருபவருக்கு ஓடோடி வந்து உதவுவார். அவரது வீட்டில் மூன்று வேளையும் வந்தோருக்கு எல்லாம் சாப்பாடு பறிமாறப்படும். பந்தா இல்லாமல் பழகுவார்.
இப்படிப்பட்டவரை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்கிறார் நடிகை ரம்பா.
இது குறித்து அவர், “விஜயகாந்துடன் இணைந்து தர்மச்சக்கரம் என்ற படத்தில் நடித்தேன். படத்தின் படப்பிடிப்புகள் பொள்ளாச்சி போன்ற ஏரியாக்களில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரங்களில் மிகவும் கடுமையாக கூட்டம் அலைமோதுமாம். அதனாலேயே அதிகாலையில் படப்பிடிப்பை திட்டமிடுவார்களாம்.
பொதுவாக காலை 6 அல்லது 7 மணிக்குத்தான் படப்பிடிப்பை நடத்துவார்களாம். ஒரு சமயம் விஜயகாந்த் ரம்பாவிடம் எத்தனை மணிக்கு சூட்டிங் வருவாய் என்று கேட்டாராம். அதற்கு ரம்பா 7 மணிக்குத்தானே என்று சொல்லியிருக்கிறார். ஆனால் கேப்டனோ நான் 4.30மணிக்கு எல்லாம் வந்து விடுவேன், நீ அதே போல் வரமுடியுமா? என்று கேட்க
அதற்கு ரம்பா 6,7 மணிக்கு தானே சூட்டிங், அதுக்கு எதுக்கு 4.30மணிக்கு என்று நினைத்துக் கொண்டு மறு நாள் போயிருக்கிறார். சொன்னபடி விஜயகாந்த் 4.30மணிக்கு எல்லாம் வந்து உட்காந்திருக்கிறாராம். இதை பற்றி கூறிய ரம்பா நேரம் விஷயத்துல தான் விஜயகாந்தை நினைத்தால் எனக்கு கொஞ்சம் பயம் என்று கூறியிருந்தார்.