Thursday, April 11, 2024

’பிச்சைகாரன் 2 ’ படப்பிடிப்பு விபத்து: மருத்துவமனையில் விஜய் ஆண்டனி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில்  2016-ம் ஆண்டு வெளியான படம் ‘பிச்சைக்காரன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் இரண்டாம் பகாம் உருவாகி படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் விஜய் ஆண்டனி. ’பிச்சைகாரன் 2’ திரைப்படம்  கன்னடம், மலையாளம்,தெலுங்கு ஆகிய மொழிகளிலும்  வெளியாகயுள்ளது.  படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்று வந்தது.

 படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட போது படப்பிடிப்புக்கு தேவையான  பொருட்கள் ஒரு போட்டில் இருந்துள்ளது. அப்போது 120 கிலோமீட்டர் வேகத்தில் பைக் போட்டை தனியாக ஓட்டிய விஜய் ஆண்டனி.  நேராக பொருட்கள் இருந்த போட்டில் மோதியதாகவும் அனதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்.

இந்த விபத்தில் விஜய் ஆண்டனிக்கு பல காயங்கள் ஏற்பட்டதால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவருடன் படக்குழுவினர்  உடன் இருப்பதாக கூறியுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News