இன்ற ஆகஸ்ட் -10 ம் தேதி நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படம் உலகம் எங்கும் வெளியாகிறது. இந்த நிலையில் ஜெயிலர் என்ற பெயரிலேயே மலையாள மொழியில் இயக்குநர் சாகிர் மாடத்தில் படம் ஒன்றை இயக்கி உள்ளார்.
இந்த படத்தையும் இன்று வெளியிட திட்டமிட்டு இருந்தார். ஒரே தலைப்பில் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானால் மலையாள ஜெயிலர் படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என எண்ணிய சாகிர், ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு கேரளாவில் மட்டும் வேறு தலைப்பு வைக்க தமிழ் திரையுலகிற்கும், ரஜினிக்கும் கோரிக்கை வைத்தார்.
ஆனால் யாரும் இவரின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.
தவிர, ரஜினி நடித்த ஜெயிலர் படத்திற்கு அதிக தியேட்டர்கள் கேரளாவில் ஒதுக்கப்பட்டன.
இந்த சூழ்நிலையில் தனது ஜெயிலர் படம் வெளியானால் மக்களிடையே வரவேற்பை பெறாது என்று உணர்ந்த சாகிர் தனது ஜெயிலர் படத்தை வெளியிடாமல் தள்ளி வைத்து விட்டார்.