Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

ரஜினிகாந்த் பேசிய முதல் பஞ்ச் வசனம் எது தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்த் என்றாலே பஞ்ச் டயலாக்குகள்தான். “நான் ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி”, “கண்ணா பன்னிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாதான் வரும்”, “ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்”, “நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்”, “கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சி போச்சு” என அவர் பேசிய பஞ்ச் வசனங்கள் பல பிரபலமானவை.

ஆனால் அவர் பேசிய முதல் பஞ்ச் வசனம் எது தெரியுமா?

1977 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சிவக்குமார், சுமித்ரா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “புவனா ஒரு கேள்விக்குறி”. இானபடத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கிஇருந்தார். பஞ்சு அருணாச்சலம் இத்திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் ஆகியவைகளை அமைத்திருந்தார்.

இப்படத்தில் சிவக்குமார் பெண்களை ஆசைக்காட்டி மோசம் செய்யும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு காட்சியில் சிவக்குமார் ஒரு பெண்வீட்டிற்குள் நுழைவார்.  அப்போது ரஜினிகாந்த் “கடப்பாரையை முழுங்கிட்டு சுக்குத் தண்ணி குடிச்சாலும் அது செரிக்காது. வயித்த கிழிச்சிட்டு வெளிய வந்துரும்” என ஒரு பஞ்ச் வசனத்தை கூறுவார். . இந்த வசனம்தான் ரஜினிகாந்த் பேசிய முதல் பஞ்ச் வசனம்!

- Advertisement -

Read more

Local News