‘Pride of Tamil Cinema’ என்ற புத்தகத்தை எழுதியுள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன் அந்த புத்தகத்திற்கு ஜனாதிபதி பரிசு கிடைத்ததையொட்டி சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தபோது நடந்த விஷயங்களை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்
நான் ரஜினியிடம் கொடுத்த புக்தகத்தை புரட்டிப் பார்த்த ரஜினி, “புத்தகத்தை பிரிண்ட் செய்ய எவ்வளவு செலவு ஆச்சு..” என்று கேட்க “14 லட்சம் செலவாச்சு ஸார்…” என்றேன்.
“ஏன்.. இப்படி நீங்களே ரிஸ்க் எடுக்குறீங்க…” என்றார் ரஜினி. “எந்த பப்ளிஷரும் வரலை ஸார். அதுனால் என் வொய்ப்கிட்ட பணம் வாங்கி செலவழிச்சேன்” என்றேன். உடனேயே ரஜினி.. “இல்ல.. இல்ல.. இதையெல்லாம் போட்டா திரும்பி வருமா.. எப்படி வரும்ன்னு பிளான் பண்ணித்தான் செய்யணும்.. இப்படியெல்லாம் இனிமேல் செய்யாதீங்க. வரவே வாரதுன்னு தெரிஞ்சும் ஏன் செய்யணும்..?” என்று கேட்டார்.

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. ஆனால் அவர் என் மீதான அக்கறையில்தான் இதைச் சொல்கிறார் என்பதை உணர்ந்தேன். ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி சில வருடப் பழக்கத்தில் இருப்பவரிடமே ஒரு சூப்பர் ஸ்டார் இப்படி அட்வைஸ் செய்றாராருன்னா அது எவ்வளவு பெரிய விஷயம்..?” என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.