Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

படுக்கையறை காட்சியில் பிரியங்கா சோப்ரா! அதிரவைத்த ‘சிட்டாடல்’ டிரைலர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்தி திரையுலகில் தனக்கு பட வாய்ப்பு கிடைக்க விடாமல் ஒரு கும்பல் சதி செய்ததாக புகார் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து பிரியங்கா சோப்ரா அளித்துள்ள பேட்டியில், ” இந்தி திரையுலகில் என்னை ஒரு மூலையில் தள்ளி விட முயற்சி செய்தனர். எனக்கு பட வாய்ப்புகள் வராமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்தது.  இவர்களுடன் அரசியல் விளையாட்டை ஆட என்னால் முடியாது என்று தோன்றியது. இதனால் சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க நினைத்தேன்.

அதன் பிறகு இசை ஆல்பத்தில் பணியாற்ற அமெரிக்கா சென்றேன். அங்கு புதிய உலகில் அடியெடித்து வைத்தேன். ஹாலிவுட்டில் பே வாட்ச், கேண்டிகோ போன்றவற்றில் நடித்தேன். இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன். இந்தி திரையுலகில் சிலர் செய்த அரசியலை என்னால் தாங்க முடியவில்லை. அதனால்தான் இந்தி படங்களில் நடிப்பதை குறைத்து விட்டேன்” என கூறி இருந்தார்.

இந்நிலையில், பிரியங்க சோப்ராவின் சூடேற்றும் படுக்கையறை காட்சிகளுடன் உலகளாவிய புலனாய்வு தொடரான சிட்டாடலின் புதிய முன்னோட்டம் பிரத்தியேகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 28ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்படவிருக்கும் இந்த இணையத் தொடரின் புதிய எபிசோடுகள , வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 28 முதல் மே 25ஆம் தேதி வரை தொடர்ந்து வாரந்தோறும் வெளியிடப்படும். இந்த தொடரை ரூசோ பிரதர்ஸின் ஏஜிபிஓ என்ற நிறுவனமும், ஷோ ரன்னரான டேவிட் வெய்லும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News