Wednesday, November 20, 2024

இணையத்தை கலக்கும் பிருத்விராஜ் பட டிரைலர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். இவர் தற்போது ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி இயக்கி உள்ளார். பென்ஞ்மினின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சவுதி அரோபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஓட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம். பிருதிவிராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைபட்டு சமீபத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜோர்டான் மற்றும் சஹாரா மற்றும் அல்ஜீரியாவில் படமாக்கப்பட்டது. தற்போது டப்பிங், இசை, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.

இந்நிலையில் ஆடு ஜீவிதம் படத்தின் டிரைலர் யூடியூபில் திடீர் என லீக் ஆனது. இதை தொடர்ந்து ஆடு ஜீவிதம் பட டிரெய்லரை படக்குழுழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளனர். அதில் பிருதிவிராஜின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வந்த இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News