மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்தச் சூழலில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. முதல் பாகம் சுமார் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் -2ம் பாகத்தில் டிரைலர் வெளியானது.
அருண்மொழி வர்மன் உயிரிழந்த செய்தியுடன் தொடங்கும் இந்த ட்ரெய்லரில் பட்டம் சூட்டிக் கொள்ள துடிக்கும் மதுராந்தகன், நாட்டுக்கு திரும்பும் ஆதித்த கரிகாலன், செய்தி சொல்லும் நம்பி, சூழ்ச்சி செய்யும் பெரிய பழுவேட்டரையர், சோழ நாட்டை வேரோடு அழிக்க துடிக்கும் நந்தினி, என கவனம் ஈர்க்கிறது இந்த ட்ரெய்லர்
இது படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.