Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

விமர்சனம்: பத்துதல

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில்  ளிவந்துள்ள திரைப்படம் பத்து தல. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சிம்பு  கோலோச்சி வருகிறார். துணை முதல்வராக இருக்கும் கவுதம் மேனன் ஏ.ஜி. ராவணனை எப்படியாவது கொலை செய்து அவன் ஆட்டத்தை அடக்க வேண்டும் என முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால், அவர் முயற்சி எதுவும் கைகூடவில்லை.
இந்த நிலையில் கவுதம் கார்த்திக் ரகசிய காவல் அதிகாரியாக சிம்புவின் கோட்டையான கன்னியாகுமாரிக்கு செல்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

கன்னடத்தில் வெளிவந்த மஃப்ட்டி படத்தின் ரீமேக் தான் இந்த பத்து தல. ஆனால் கொஞ்சம் கூட அந்த சயால் தெரியாமல் அழகாக திரைக்கதையை வடிவமைத்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணா. சில காட்சிகள் மஃப்ட்டி படத்தில் இடம்பெற்றதாக இருந்தாலும், முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைக்கதையை தான், தனது இயக்கத்தின் மூலம் திரையில் நமக்கு காட்டியுள்ளார்.

ஏ.ஜி. ராவணனாக வரும் சிலம்பரசன் மாஸ் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதாபாத்திரத்தை சிம்பு தாங்கிய விதம் பாராட்டுக்குரியது. கன்னடத்தில் இந்த கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்த சிவராஜ்குமார் நடிப்பு மிரட்டல் என்றால், அதை விட ஒரு படி மேலாகவே சிம்பு பத்து தல படத்தில் கலக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
அடுத்ததாக கவுதம் கார்த்திக், நிதானமான நடிப்பை திரையில் காட்டியுள்ளார். முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளில் பிரமாதமாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி திரைக்கதையின் ஓட்டத்திற்கு முக்கிய காரணமாக தன்னுடைய கதாபாத்திரம் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு சிறப்பாக நடித்துள்ளார்.

வில்லனாக வரும் கவுதம் மேனன் நடிப்பு அசத்தல். அரசியல்வாதியின் ஆசை எப்படி இருக்கும் அதற்காக அரசியல்வாதி என்ன செய்வார்கள் என்பதை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

முதல் பாதி திரைக்கதை சற்று மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதி தொய்வு இல்லாமல் செல்ல சிம்புவின் நடிப்பு காரணமாக இருந்தது.

ஏ.ஆர். ரஹ்மான் ஒவ்வொரு முறையும் ரசிகர்களுக்கு திரையரங்கில் சர்ப்ரைஸ் கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை செம மாஸ். குறிப்பாக இடைவேளை காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சி இரண்டிலும் பட்டையை கிளப்பிவிட்டார்.
ஒளிப்பதிவு படத்திற்கு முக்கிய பலமாக அமைத்துள்ளது. அதே போல் ஸ்டண்ட் மற்றொரு பிளஸ் பாயிண்ட். மேலும் சிம்புவிற்கு எழுதிய மாஸ் வசனங்கள். அதுமட்டுமின்றி அரசியல் குறித்து பேசப்பட்ட வசனங்களும் அருமை. எடிட்டிங் முதல் பாதியில் சில தொய்வு, மற்றபடி  சிறப்பாகவே இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News