Wednesday, April 10, 2024

விஜயகாந்துக்கு பத்ம பூஷண் – தமிழகத்தில் யார் யாருக்கு பத்ம விருதுகள்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தமாக 132 பத்ம விருதுகளில் மிழகத்தை சேர்ந்த 8 பேர் அடங்குவர்.

விஜயகாந்த்: தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் விஜயகாந்த் செயல்பட்டுள்ளார். தேமுதிக-வின் நிறுவனத் தலைவர். கடந்த டிசம்பரில் அவர் காலமானார். இந்த சூழலில் அவரது மறைவுக்குப் பிறகு அவருக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

வைஜெயந்திமாலா: இந்திய சினிமா பிரபலம் மற்றும் நடனக் கலைஞரும் ஆவார். 91 வயதான அவர் சென்னையில் பிறந்து, வளர்ந்தவர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்தவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் . அவருக்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மா சுப்ரமண்யம்: நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமண்யம், மாநில அளவிலும், தேசிய அளவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு விருதுகளை தனது கலை பயணத்துக்க வென்றுள்ளார். 80 வயதான அவர் கடந்த 1981-ல் பத்மஸ்ரீ விருதையும், 2003-ல் பத்ம பூஷண் விருதையும் வென்றுள்ளார். இந்த சூழலில் தற்போது அவருக்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பன்: 87 வயதான கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடன கலைஞர் பத்திரப்பன் பத்மஸ்ரீ விருதை வென்றுள்ளார். புராணம் மற்றும் இந்திய வரலாற்றை தனது கலை மூலம் பரப்பி வருகிறார். தனது கலையில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய வழக்கத்தை தகர்த்து பெண்களுக்கும் பயிற்சி அளித்துள்ளார்.

ஜோஷ்னா சின்னப்பா: 37 வயதான சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை. உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். இந்த சூழலில் அவருக்கு பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ டி குரூஸ்: எழுத்தாளர் ஜோ டி குரூஸ், சாகித்ய அகாடமி விருதை இவரது படைப்பு வென்றுள்ளது. இந்த சூழலில் அவருக்கு பத்மஸ்ரீ விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி. நாச்சியாருக்கு மருத்துவத் துறையில் பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News