நடிகர் அஜித் சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், விருது பெற்ற அனுபவம் குறித்து கூறியுள்ளார். அதில், “விருது கிடைத்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில் அதனால் என் மீதான பொறுப்புகளும் அதிகமாகியுள்ளன. அந்த விருது எனக்கு அளித்த மரியாதைக்கு ஏற்ப வாழவேண்டும் என்ற எண்ணம் என்னை மேலும் கவனமாக செயல்பட வைக்கிறது.

நான் தற்போது சினிமா மற்றும் கார் ரேஸிங் ஆகிய இரு துறைகளிலும் ஈடுபட்டு வருகிறேன். கடினமாக உழைத்து, என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என விரும்புகிறேன். ‘பத்ம பூஷன்’ விருது எனக்கு மிகப்பெரிய ஊக்கமளித்திருக்கிறது. அதே சமயம், நான் மேற்கொண்டு செல்லும் பாதை சரியானதுதான் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இது எனது திரைப்படங்களிலும், மோட்டார் ரேஸிங் வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட தூண்டுகிறது.
நான் ஒரு வேலைக்கு கிடைக்கும் பணத்தை அதிக முக்கியத்துவத்துடன் பார்க்கும் ஒருவரல்ல. பணமும், அங்கீகாரமும் நாம் செய்த செயல்களின் வெளிப்பாடே என நம்புகிறேன். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்தது என் கடன்களை அடைக்கத்தான். அதனால் என் பணியின் நெறிமுறைகள் மற்றும் ஒழுங்குகளிலிருந்து ஒருபோதும் விலகாமல் இருந்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.