Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

பா.ரஞ்சித்தின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் வெளியாகிறது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், பா.இரஞ்சித் எழுதி இயக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்படுகிறது.

கலைத் துறையில் குறிப்பாக சினிமாத் துறையில் இலாப நோக்கோடு மட்டுமே இயக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் இங்கு பேச வேண்டிய, காட்சிப்படுத்த வேண்டிய, மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட மனித வாழ்வின் பக்கங்களை படம் பிடித்து காட்டும் ஒரு நிறுவனமாக நீலம் புரொடக்சன்ஸ்’ இயக்குர் பா.இரஞ்சித்தால் ஆரம்பிக்கப்பட்டது.

‘பரியேறும் பெருமாள்’ படத்திலிருந்து துவங்கப்பட்ட இந்தப் பயணம், ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’, ‘குதிரை வால்’,  ‘சார்பட்டா பரம்பரை’ என தனித்துவமிக்க படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறது.

அடுத்து சேத்துமான்’, ‘ஜெ.பேபி’, ‘பொம்மை நாயகி’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ என அடுத்தடுத்த படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் தமிழ் சினிமாவைத் தாண்டி தனது பயணத்தை துவங்க தனது சிறகை இன்னும் விரித்து பறக்க  நீலம் ஸ்டுடியோஸ் துவங்கியிருக்கிறது. 

நீலம் ஸ்டுடியோவோடு, கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து  உருவாகும் முதல் தயாரிப்பாக  இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம்’ என்னும் திரைப்படம் & தொலைக்காட்சி தொடர் உருவாகிறது. இதனை பா.இரஞ்சித் எழுதி இயக்குகிறார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்படுகிறது. இந்த விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் கலந்து கொள்கிறார்.

இத்திரைப்படம் மற்றும் தொலைக் காட்சித் தொடரை இயக்குநர் பா.இரஞ்சித், அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகையர் மற்றும் தொழிற் நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

- Advertisement -

Read more

Local News