பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்த ஷில்பா ஷெட்டி, கடைசியாக 2023ல் வெளியான ‘சுகி’ படத்தில் நடித்தார். அதன் பிறகு, ஓடிடியில் மட்டும் வெளியான ‘போலீஸ் போர்ஸ்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது, ‘கேடி – தி டெவில்’ என்ற புதிய படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.


சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில், சினிமா உலகம் கடினமான மாற்றத்தைக் கடந்து செல்கிறது. இன்றைய காலத்தில், ஆணோ அல்லது பெண்ணோ பார்வையாளர்களின் கவனத்தை பெறுவது சிக்கலான விஷயமாகிவிட்டது. ரசிகர்கள் நல்ல கதைகளையே தேர்வு செய்கிறார்கள். தற்போது, சினிமாவை பார்க்க பல ஓடிடி தளங்கள் இருப்பதால், ஒவ்வொரு ரசிகரின் தேர்வும் மாறுபட்டிருக்கும். அதனால், நடிகர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக திரைப்படங்களை தேர்வு செய்ய வேண்டும்.
“பல ஓடிடி தளங்கள் இருக்கிறது என்பதால், இது ஒரு வகையில் வரமாகவும், சாபமாகவும் இருக்கிறது. ஒரு இருமுனைக் கத்தியாக இது செயல்படுகிறது. சில நேரங்களில், படங்கள் தோல்வியடைந்தாலும், அதில் உள்ள பாடல்கள் ஹிட் ஆகும். இது தான் என்னை இத்தனை வருடங்களாக சினிமாவில் நிலைத்திருக்க உதவியது. ஒவ்வொரு பாடலும் எனக்கு ஒரு முக்கியமான மைல்கல். ஆனால், சில திரைப்படங்களில் சிறப்பாக நடித்தாலும், அவை அதிக கவனம் பெறாமல் போய்விடுகிறது.” என்று தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.