தெலுங்கில் ஷங்கர் மற்றும் ராம்சரண் இணைந்த “கேம் சேஞ்சர்” என்ற பிரமாண்ட படம் ஜனவரி 12 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் பின்னர், ஜனவரி 12 அன்று பாலகிருஷ்ணாவின் “டாக்கு மகராஜ்” மற்றும் ஜனவரி 14 அன்று வெங்கடேஷ் நடித்த “சங்கராந்தி வஸ்துனம்” படங்களும் திரையரங்குகளில் வெளியாகின்றன.
“சங்கராந்தி வஸ்துனம்” படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சமீபத்தில் “கோட்” படத்தின் மூலம் பிரபலமான மீனாட்சி சவுத்ரி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டை தொடர்ந்து படக்குழுவினர் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடத்தும் டாக் ஷோ போலவே நடிகர் ராணா டகுபதியும் ஒரு டாக் ஷோ நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் “சங்கராந்தி வஸ்துனம்” படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதில் நடிகர் வெங்கடேஷ் பேசும்போது, ஐஸ்வர்யா ராஜேஷுடனான ஒரு காட்சியில் அவர் தனது கன்னத்தில் மாறி மாறி அறைய வேண்டும், ஆனால் கொஞ்சம் வேகமாகவே அடித்துவிட்டார் என்று கூறினார்.இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ், “மெதுவாகத்தான் அடித்தேன். உங்களுக்கு வலிக்கவில்லையா?” என கேட்டபோது, “இன்னும் கொஞ்சம் வேகமாக அடிக்கலாம்” என்றார். அதன் பிறகு நான் ஓங்கி அடித்தேன். இதுவரை யாரும் உங்கள் கன்னத்தில் அடித்ததுண்டா?” என கேட்டபோது, “இது தான் முதல் முறை” என டோலிவுட் நடிகர் வெங்கடேஷ் பதிலளித்தார்.