தொலைக்காட்சி தொடர்களின் நாயகி நிமேஷிகா ராதாகிருஷ்ணன், தனது முதல் நடிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
அவர், . “ஹைதராபாத்ல பிறந்தாலும் படிச்சது கோயம்பத்தூர் தான். அங்க ஒரு சேனல்ல ஆங்க்ரரா வேலை பார்த்தேன். மாடல் ஆகணும்கிறதுதான் என் கனவு.
அப்படியே ட்ராக் மாறி தான் சீரியல்ல நடிக்க ட்ரை பண்ணேன். என் தோழி மூலமா அப்படி ஒரு சான்ஸ் கிடைச்சது. ஆனா, மறு நாள் படப்பிடிப்பு.. உடனே கிளம்பி வாங்கனு தகவல் அனுப்பினாங்க. கோவையிலிருந்து அந்த நேரத்துக்கு பிளைட் இல்லை… நேரடி ரயில் பஸ்ஸும் இல்லை. வேறென்ன செய்யறது.. அங்கிருந்து சேலம், வேலூர்.. இப்படி பஸ் மாறி மாறி சென்னை வந்து சேர்ந்தேன்..அந்த படபடப்பான நாளை மறக்கவே முடியாது” என்கிறார் நிமேஷிகா.