Tuesday, February 4, 2025

சிறப்பு காட்சிகளின்றி வெளியாகும் நாக சைதன்யாவின் ‘தண்டேல்’ !!!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாகசைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடித்துள்ள தண்டேல் திரைப்படம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வரும் பிப்ரவரி 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தெலுங்கு மாநிலங்களான தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் புதிய படங்கள் வெளியானால், வழக்கமாக நள்ளிரவு 1 மணி மற்றும் அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிகள் நடைபெறும்.

கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் பிரிமியர் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தெலுங்கானாவில் நள்ளிரவு சிறப்புக் காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. சங்கராந்தி பண்டிகையின் போது அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கும் பிறகு நீதிமன்றம் முழுமையான தடை விதித்துவிட்டது. இதன் விளைவாக, இனிமேல் தெலுங்கானாவில் அதிகாலை சிறப்புக் காட்சிகளும், கூடுதல் டிக்கெட் கட்டணமும் இல்லை.

இந்த சூழலில், ஆந்திர மாநிலத்தில் தண்டேல் படத்திற்காக 50 ரூபாய் கூடுதல் கட்டண உயர்வுக்கான அனுமதி கோரி தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளார். ஆனால், அரசாங்கம் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால், ஆந்திராவில் படத்திற்கான முன்பதிவு தொடங்கப்படவில்லை. கூடுதல் கட்டண உயர்வுக்கு அனுமதி கிடைத்தாலும், அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது இன்னும் தெரியவில்லை.சிறப்புக் காட்சிகள் மற்றும் கூடுதல் டிக்கெட் விலையீடு இல்லாததால், தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்குப் படங்களின் வசூல் குறைய வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

Read more

Local News