தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமான உலக அழகி ப்ரியங்கா சோப்ரா, தொடர்ந்து இந்தி, ஹாலிவுட் படங்களில் நடிக்கிறார். 2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்தார்.
இவர், “என்னுடன் பணியாற்றிய பல நடிகர்களை காதலித்தேன். எனது முன்னாள் காதலர்கள் அனைவரும் சிறந்த ஆளுமை கொண்டவர்கள். ஆனால் கருத்து வேறுபாடுகள் அல்லது ஒற்றுமையின்மை காரணமாக அந்த காதல்கள் தோல்விஅடைந்தன. ஆனால் அவர்கள்மிகவும் அற்புதமானவர்கள். என் கணவர் என் வாழ்க்கையில் வருவதற்கு முன்பே நான் காதல் உறவுகளில் இருந்து விலகி விட்டேன்” என்று கூறியிருக்கிறார்.