நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘கூலி’. இதில் நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர் கான் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில் வெளியான கூலி படத்தின் சிக்கிட்டு, மோனிகா மற்றும் பவர் ஹவுஸ்’ பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் ‘கூலி’ திரைப்படம் திரைக்கு வர இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், ‘முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியுடன் இசையமைப்பாளர் அனிருத் செம ஜாலியாக பெடல் விளையாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களும் மற்றும் வீடியோக்களும் இணையதளத்தில் லைரலாகி வருகின்றன.
அனிருத் மிகக் குஷியாக பெடல் விளையாடும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள், “அவர் இசையமைத்துள்ள ‘கூலி’ படத்திற்கான இசையை சிறப்பாக முடித்துவிட்டு தோனியுடன் ஜாலியாக பெடல் விளையாடுகிறார் என எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.