கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இதையடுத்து கமலஹாசன் மீண்டும் இந்திய அளவில் அதிகம் சம்பளம் பெறக்கூடிய நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார்.
தற்போது நடிகர் வினோத் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் 233 வது படம் குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இயக்க உள்ளதாகவும், படத்தினுடைய முதல் கட்ட அறிவிப்பு ரைஸ் டூ ரூல் என்ற தலைப்பில் நடிகர் கமலஹாசன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருக்க கூடிய வீடியோ வெளியாகி அதிகம் பகிரப்பட்டது.
இந்த நிலையில் தனது 233 வது திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வேடத்தில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஈநடிகர் கமலஹாசன் விக்ரம், விஸ்வரூபம் போன்ற பல திரைப்படங்களில் பாதுகாப்புத் துறை சார்ந்த அதிகாரி வேடத்தில் நடித்து மிரள வைத்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரம் இப் புதிய திரைப்படத்தை வினோத் இயக்க இருப்பதால் படத்தினுடைய முக்கியத்துவம் தற்போது குடியிருக்கிறது.