Friday, April 12, 2024

“நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுத்தால் கடிதம் வாபஸ் பெறப்படும்” – தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பதிலடி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்குரிய நஷ்ட ஈட்டுத் தொகையை சிம்பு தரப்பினர் இன்னமும் தராததால் ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிடக் கூடாது…” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது.

“தயாரிப்பாளர் சங்கத்தின் இந்தச் செயல் கோர்ட்டு அவமதிப்பாகும். அப்படி எந்த ஒப்பந்தமும் எங்களிடையே இல்லை. நானோ, சிம்புவோ, சிம்புவின் அம்மாவோ எந்தக் கையெழுத்தையும், எந்தவொரு ஒப்பந்தத்திலும் போடவில்லை..” என்று டி.ராஜேந்தர் இன்று காலையில் நடந்த பிரஸ் மீட்டில் கூறியிருந்தார்.

தொடர்பாக இன்று மாலை தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, “நான் தயாரித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்புவால் எனக்கு ஏற்பட்ட இழப்பீடாக தான் அடுத்தடுத்து நடிக்கப் போகும் 3 படங்களில் இருந்து தனது சம்பளத்தில் ஒரு படத்துக்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாய்வீதம், 3 படங்களுக்கு 7 கோடியே 20 லட்சம் ரூபாயை நஷ்ட ஈடாக செட்டில் செய்வதாகச் சொல்லியிருந்தார் சிம்பு.

அந்த வகையில் இப்போது வெளியாகவிருக்கும் ஈஸ்வரன்’ படத்தின் மூலம் எனக்கு வர வேண்டிய 2 கோடியே 40 லட்சம் ரூபாய் இப்போதுவரையிலும் வரவில்லை. அதனால்தான் ஈஸ்வரன்’ படத்தை வெளியிட கூடாது என்று கியூப்பில் புகார் அளித்துள்ளோம்…” என்றார்.

மேலும் “இந்தப் பண விவகாரம் நல்லபடியாக செட்டிலாகிவிட்டால், கியூப்பிற்குக் கொடுத்த கடிதத்தை வாபஸ் வாங்குவது குறித்து தயாரிப்பாளர் சங்கம் கூடி முடிவெடுக்கும். இதில் நடப்பு தயாரிப்பாளர் சங்கமும், விநியோகஸ்தர்கள் பெடரேசனும் இணைந்து பேசி முடிவெடுக்கும்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News