Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

விஜயகாந்தை சுட்ட எம்.ஜி.ஆர்.!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எம்.ஜி.ஆருக்கும் விஜயகாந்துக்கும் இடையே நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை நடிகர்  ராஜேஷ் பகிர்ந்துள்ளார்.

“முதல்வராக இருந்த எம்.ஜி.ரால் பேச இயலாத நிலை. ஆனாலும் எனது தங்கை திருமணத்திற்கு வந்தார். அதே போல விஜயகாந்தும் வந்தார்.

எம்.ஜி.ஆரிடம் விஜயகாந்தை அழைத்துச்சென்று இவர் தான் விஜயகாந்த் என்று அறிமுகம் செய்து வைத்தேன்.  பேச முடியாத எம்.ஜி.ஆர்., தனது அருகில் அமரும்படி விஜயகாந்திடம்  சைகை காட்டினார்.

பிறகு,  துப்பாக்கியால் சுடுவது போல், விரல்களால் சைகை காண்பித்தார். விஜயகாந்துக்கும், சுற்றிலும் இருந்தவர்களுக்கும் அதிர்ச்சி. ஏன் இப்படி சைகை காட்டுகிறார் என்பது யாருக்கும் புரியவில்லை.

பிறகுதான் பலருக்கும் நினைவு வந்தது. ..   ஒரு ஷூட்டிங்கின்போது துப்பாக்கி சுடும் காட்சியில் விஜயகாந்த் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அப்போதுதான் திரும்பினார்.

அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர்.அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தார். ஆனாலும் நியூஸ் பேப்பரில் பார்த்தை ஞாபகம் வைத்து விஜயகாந்தை எம்.ஜி.ஆர். நலம் விசாரித்தார். உண்மையிலேயே எம்.ஜி.ஆர். மறக்க முடியாத மனிதர்” என்று ராஜேஷ் கூறினார்.

 

- Advertisement -

Read more

Local News