Friday, April 12, 2024

மீண்டும் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘சிட்டிசன்’ என்ற ஒரு படத்தை கொடுத்துவிட்டு 18 வருடங்கள் கழித்து மீண்டும், இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் இயக்குநர் சரவண சுப்பையா. படத்தின் பெயர் ‘மீண்டும்’. மீண்டு வந்திருக்கிறாரா என்பதைப் பார்ப்போம்..!  

நாயகன் கதிரவன் ஒரு ரா உளவுத் துறை அதிகாரி. அவருக்கு ஒரு மகன் மட்டுமே உண்டு. மனைவி..? அவரின் மனைவி தற்போது சரவண சுப்பையாவோடு குடும்பம் நடத்துகிறார். அவர் ஏன் கதிரவனைப் பிரிந்தார் என்பதற்கு ஒரு கதை இருக்கிறது.

படத்தின் இன்னொரு கதை. இலுமினாட்டிகள் போன்ற ஒரு கூட்டம். பெயர் எளிதில் வாயில் நுழையாத ஒரு நாட்டில் இருந்துகொண்டு உலக நாடுகளுக்கு எதிராக சதி செய்கிறது.

2004-ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமிக்கு காரணமே அவர்கள்தான் என்பது போன்ற கதைகள் அவர்களுக்குப் பின்னால் இருப்பதால் அவர்கள் பெரும் ஆபத்தானவர்கள் என்பதாக சொல்லப்படுகிறது.

அந்தக் கூட்டத்தை வேரோடு வேரறுக்க ரா ஏஜெண்ட்டான கதிரவன் தன் வயிற்றுக்குள் சிப்பை மாட்டிக் கொண்டு கிளம்புகிறார். ஆனால் அவர் அவர்களிடம் மாட்டிக் கொண்டு சித்ரவதைப்படுகிறார். அவர் எப்படி அந்தக் கூட்டத்தை அழித்து நாட்டைக் காத்ததோடு அவரும் தப்பிக்கிறார் என்பது மற்றொரு கதை.

ஒரே படத்தில் ஒரு வீட்டு எமோஷ்னல்.. ஒரு நாட்டு எமோஷ்னல்.. என இரண்டு லைன் கதைகளைப் பிடித்திருக்கிறார் இயக்குநர்.

நாயகனான கதிரவன்தான் இப்படத்தைத் தயாரித்துள்ளார். அவரே நாயகன் என்பதால் சில விசயங்களில் தாராளமாக செலவு செய்திருக்கிறார்கள். பல இடங்களில் மிக மிக குறைந்த செலவில் ஒப்பேத்தி இருக்கிறார்கள்.

நடிப்பு விசயத்தில் கதிரவன் ஓவர் எமோஷனலில் மாட்டிக் கொள்கிறார். அது ஒருவித செயற்கைத் தன்மையை அவரது நடிப்பில் கொண்டு வந்திருக்கிறது. நாயகி தனது கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கச்சிதமாகக் கொடுத்துள்ளார்.

இரு கணவன்கள் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொள்ளும் காட்சிகளில் அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. அழகாகவும் இருக்கிறார். சரவண சுப்பையா மலையாள கிறிஸ்தவராக நடித்திருக்கிறார். நிச்சயமாக அவரது நடிப்பில் நல்ல மெச்சூட் தெரிகிறது. அவரை இனி பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் காணலாம்.

இயக்குநர் கேபிள் சங்கர் ஓரிரு காட்சிகளில் வந்தாலும் கவனம் ஈர்க்கிறார். அவரைப் போல நிறைய இயக்குநர்களை நடிக்க வைத்திருக்கிறார் சரவண சுப்பையா. ஓரளவு எல்லோருமே தேறியிருக்கிறார்கள்.

படத்தின் மெயின் ஹீரோ கேமராமேன்தான். மிகத் துல்லியமாக சில ஷாட்கள் கதை சொல்கின்றன. தந்தைக்கும், மகனுக்குமான முதல் மாண்டேஜ் பாடலிலே அத்தனை அழகு கேமரா வொர்க். இசையும் இசைக்கேற்ற வைரமுத்துவின் வரிகளும் படத்திற்கு கூடுதல் பலம். பின்னணி இசை ஓ.கே ரகம்.

இரு கதைகளாக பயணிக்கும் திரைக்கதை நல்ல முயற்சி. ஒரு இண்டெர்நேஷனல் அளவில் ஒரு பிரச்சனையைப் பேசினாலும் அங்கங்கே இந்தியாவின் அரசியல் அமைப்பையும் ஆள்பவர்களை அங்கங்கே சீண்டியிருக்கிறார் இயக்குநர்.

ஆனால், இரு கதைகளையும் இணைக்கும் புள்ளியாக எதாவது ஒரு விசயத்தைப் புகுத்தி இருந்தால் இன்னும் எமோஷ்னல் டச் கிடைத்திருக்கும்.

படத்தின் போக்கு சில சமயம் ஆங்காங்கே சுத்துவதும் ஒரு பலவீனம்.  மீண்டும், மீண்டும் பார்க்க முடியாவிட்டாலும், சின்ன பட்ஜெட்டில் நல்ல முயற்சி என்பதால் ஒரு முறை பார்க்கலாம்.

RATING : 2.5 / 5

- Advertisement -

Read more

Local News