Wednesday, April 10, 2024

இவானா நடித்த ’மதிமாறன்’ புதிய அப்டேட்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள”மதிமாறன்”.இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே போன்ற படங்களில் நடித்த இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். வெங்கட் செங்குட்டுவன் கதாநாயகனாக நடித்துள்ளார். வெங்கட் செங்குட்டுவன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பர்வேஸ் கே ஒளிப்பதிவு செய்ய சதீஷ் சூர்யா படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். மாறுபட்ட திரில்லர் படமாக  உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப்படத்தின் கதை.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் தற்போது வெளியீட்டுக்கான  இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் “மதிமாறன்” படத்தின் டிரைலர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தினை பாபின்ஸ் ஸ்டுடியோஸ் எனும் புதிய நிறுவனம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடவுள்ளது.

- Advertisement -

Read more

Local News