Wednesday, November 20, 2024

விஷாலுக்கு ஐகோர்ட் கிடுக்குப்பிடி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாக பெற்றார். ஒரு கட்டத்தில் லைகா நிறுவனம் இந்த கடனை ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதையும் விசால், திருப்பித் தரும்வரை,  அவரது  பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தம் போட்டது.

இந்நிலைில், “ஒப்பந்தத்தை மீறி, தனது   ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிட முயற்சிக்கிறார்”  என்று லைகா நிறுவனம் வழக்கு தொடுத்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ.15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக் கூடாது என தடையும் விதித்தது.

இந்நிலையில்,லைகா நிறுவனம் தரப்பில், “விசால் வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் வேண்டுமென்றே தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை.   அந்தத்  தொகையில் பாதியையாவது டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.

விஷால் தரப்பு வழக்கறிஞர், இதுகுறித்து பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “பணத்தை ஏன் இன்னும் திரும்ப செலுத்தாமல் இருக்கிறீர்கள்? பணத்தை செலுத்த வேண்டியது தானே?” என  விசால் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

- Advertisement -

Read more

Local News