Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

’மாலை நேர மல்லிப் பூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முற்றிலும் புதுமுகங்கள் நடித்த ‘மாலை நேர மல்லிப் பூ’ படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது.

21 வயதே ஆன புதிய அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயண் மிக வித்தியாசமான கதைக் களத்தில், பாலியல் தொழிலாளி ஒருவரின் ஆட்டோகிராஃப்’ என்று சொல்லக் கூடிய அளவுக்கு இயக்கியிருக்கும் படம் ‘மாலை நேர மல்லிப் பூ’.

இந்தப் படத்தில் பாலியல் தொழிலாளி பாத்திரத்தில், பிரபல தியேட்டர் ஆர்டிஸ்டான வினித்ரா மேனன் நடித்துள்ளார். அவரது பத்து வயது மகனாக குழந்தை நட்சத்திரம் அஸ்வின் நடித்துள்ளார்.

மிக இளம் வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட லட்சுமியின் வாழ்வின் சில குறிப்பிட்ட காலங்களை, ஆவணப்படுத்தியிருக்கும் இயக்குநர் சஞ்சய், அத்தொழிலில் அவர் சந்திக்கும் வாடிக்கையாளர்கள், அவரது வீட்டு உரிமையாளர், சக பாலியல் தொழிலாளிகள் ஆகியோருடன் அவருக்கு நிகழும் அனுபவங்களை மிக நேர்மையாக காட்சிப்படுத்தியுள்ளார்.

இந்தச் சூழலில், தனது இருட்டான பக்கங்களை மறைத்து,  பத்து வயதே ஆன, ‘என் அப்பா யார் என்று சதா கேள்வி எழுப்பி வரும்  மகனை வளர்த்தெடுக்க அவர் காட்டும் தாய்ப் பாசம் பார்ப்பவர்களை நிச்சயம் நெகிழவைக்கும்.

பிரத்யேகமாக ஓ.டி.டி. தளங்களை மனதில் வைத்தே உருவாக்கப்பட்ட இந்த ‘மாலை நேர மல்லிப் பூ’ மிக விரைவில் முன்னணி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

- Advertisement -

Read more

Local News