விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லரில் விஜய் பேசும் தே.ப. என்ற தகாத வார்த்தைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “முதலில் இந்த வார்த்தையை பேச வேண்டுமா என விஜய் சந்தேகமுடனே கேட்டார். நான்தான் கதைக்கு தேவையென கூறி அவரை ஒப்புக்கொள்ள வைத்தேன். இதற்கு முற்றிலும் நானே பொறுப்பேற்றுகொள்கிறேன்.
ட்ரெய்லரில் அந்த இடத்தில் தேவைப்பட்டதால் வைத்தேன். திரையரங்குகளில் அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டுதான் வெளியாகும்.
இது நடிகர் விஜய் பேசிய வார்த்தை கிடையாது. லியோவில் பார்த்திபன் எனும் அந்தக் கதாபாத்திரம் பேசும் வார்த்தை தான்” என கூறியுள்ளார்.