எம்ஐகே புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்க ‘குட்டிப்புலி’ சரவண சக்தி இயக்கத்தில் விமல், தான்யா ஹோப் ஜோடியாக நடித்து இருக்கும் படம், குலசாமி.
படத்திற்கு விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார்.
இளம்பெண்களை.. குறிப்பாக கல்லூரி படிக்கும் மாணவிகளை குறிவைத்து, பாலியல் ரீதியான வன்முறையில் இறங்குகிறது ஒரு கும்பல். அந்த கும்பலை எதிர்த்து நாயகன் எப்படி போராடுகிறார் என்பதை ரசிக்கும்படி சொல்லி இருக்கிறார்கள்.
முதல் காட்சியில், அந்த காமக்கொடூரனுக்கு விமல் அளிக்கும் தண்டனையே அசர வைக்கிறது.
இன்றைய சூழலுக்குத் தேவையான – பாலியல் வன்முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் – படத்தை அளித்துள்ள இயக்குநரை பாராட்டலாம்.
வழக்கமான சாஃப்ட் கேரக்டரில் இருந்து மாறி, அதிரடியாக இறங்கியிருக்கிறார் விமல். எதிரிகளை துவம்சம் செய்யும்போதும் சரி, தங்கையை நினைத்து கதறி அழும்போதும் சரி.. தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
நாயகி தான்யா ஹோப், வெறும் பாடலுக்கு என்று மட்டும் இல்லாமல், கதையின் முக்கிய பாத்திரமாக வருகிறார்.
நகைச்சுவைக்கு குட்டிப்புலி அங்கங்கே வந்து போகிறார்.
சரவண சக்தியின் மகன் சூர்யா உள்ளிட்ட வில்லன்கள், உண்மையிலேயே அதிர வைக்கிறார்கள்.
எடிட்டர் கோபி கிருஷ்ணா, இசையமைப்பாளர் மஹாலிங்கம் , ஒளிப்பதிவாளர் ரவிசங்கர்.. அனைவரும் படத்துக்கு பலமாக நிற்கிறார்கள்
மொத்தத்தில், சுவாரஸ்யமான படம் என்பதோடு விழிப்புணர்வு படமும்கூட. அனைவரும் பார்க்க வேண்டிய படம்.