Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

கோயில் கட்டளைதாரராக குஷ்பு!  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விஷ்ணுமாயா கோயிலில் சிறப்பு பூஜை செய்ய ஆண்டுதோறும் ஒரு பெண், கட்டளைதாரராக நியமிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டு உள்ளார். ஒரு வருடம் அவர் இந்தப் பதவியில் தொடர்வார்.

இதை முன்னிட்டு சிறப்பு நாரி பூஜைக்கு கோயில் நிர்வாகம் குஷ்புவுக்கு அழைப்பு விடுத்தது. அதை ஏற்று அவர் கலந்துகொண்டார்.

இந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள குஷ்பு, “திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் நாரி பூஜை செய்ய அழைக்கப்பட்டதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். குறிப்பிட்ட நபர்களே, இதற்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அதுவும் தெய்வமே அந்த நபரை தேர்வு செய்யும் என்பது நம்பிக்கை. இப்படி ஒரு பெருமையை எனக்கு வழங்கிய கோயில் நிர்வாகிகளுக்கு நன்றி. நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என்பதை உணர்ந்து,பிரார்த்தனை செய்பவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் என்பதை நம்புகிறேன். அன்பிற்குரியவர்களுக்காக பிரார்த்தனை செய்தேன். அத்துடன், இந்த உலகம் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும், அமைதியான இடமாகவும் இருக்க பிரார்த்தனை செய்தேன். ஓம் சிவாய நமஹ” என குறிப்பிட்டுள்ளார்

- Advertisement -

Read more

Local News