Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

ஹாட்ரிக் ஹிட் அடிக்கப் போகும் கார்த்தியின் ‘சர்தார்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கார்த்தியின் தொடர் ஹிட்டை தொடர்ந்து வரும் ‘சர்தார்’ படத்துக்கு கடும் உழைப்பை கொட்டி.. பிரமாண்ட சினிமாவாக உருவாக்கி வருகிறார்கள் பிரின்ஸ் பிக்சர்ஸ் படக் குழுவினர்.

இரும்புதிரை’, ‘ஹீரோ’ வித்தியாசமான கதை களங்களுக்கு பிறகு மூன்றாவது படமாக கார்த்தியுடன் கை கோர்த்திருக்கிறார் இயக்குர் பி.எஸ்.மித்ரன்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன், “சர்தார்’ என்றால் பெர்சிய மொழியில் ‘படைத் தலைவன்’ என்று பொருள். இந்த ‘சர்தார்’ படம் ஒரு ஸ்பை த்ரில்லர் கதையைக் கொண்டது.

உளவாளி என்பது நமக்கு தெரிந்ததெல்லாம் நாடுவிட்டு நாடு நடப்பதுதான்.  ஆனால், நம்மைச் சுற்றியே அவ்வளவு உளவாளிகள் இருக்காங்க. உளவுங்கிறது நாட்டோட ராணுவ ரகசியம் தெரிஞ்சுக்கிற வேலை மட்டுமில்லை. நமக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு டீக்கடை பையனிலிருந்துகூட அதை ஆரம்பிக்கலாம்.

ரொம்ப சிம்பிளான இடத்திலிருந்து தொடங்கி மிகப் பெரிய இடம் நோக்கி இன்டர்நேஷனல்வரைக்கும் உளவு போகுது. இதில் உலக அரசியலும் உள்ளது. இது சாமானியனை எப்படி பாதிக்கிறது என்பது பற்றிய கதைதான் இது.

நம் அடையாளம். நாம் செய்யும் செயல்கள்தான். உளவாளிகளும் அப்படித்தான். அலெக்ஸாண்டர்,  ஹிட்லர் உட்பட பெரும்பாலானோர் வரலாற்றின் முக்கியமான சாதனைகளுக்கு பின்னாடி முக்கிய காரணமாக இருப்பது உளவாளிகள்தான்.

கார்த்தி, ‘சிறுத்தை’யில் ரத்னவேல் பாண்டியனாக விரைப்பும், ஜாலியாக இரண்டிலும் வந்தார். இதில் ஜாலியான போலீஸ்காரன். அலப்பறையாக இருக்கும். வயதான அப்பாவாக கார்த்தி கன கச்சிதம். இளமை, வயதானவர் இருவருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும்.

அந்த மேக்கப்பை போடுவதற்கே மூன்று மணி நேரமாகும். மேக்கப்பை போட்டு டயலாக் பேசி நடிப்பதே கஷ்டம். இதில், கூடவே ஆக்ஷன் வேறு இருக்கும். அதுவும் ரொம்ப கஷ்டம். இப்படி மெனக்கிட்டு நடித்து கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார் கார்த்தி.

ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன்னு இரண்டு பேருக்கும் முக்கிய கதாபாத்திரம். மற்றொரு முக்கிய கேரக்டரில் லைலா நடிச்சிருக்காங்க.

கார்த்தியின் படங்களிலேயே பெரும் பொருட் செலவில் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் எஸ்.லட்சுமண்குமார். வரும் தீபாவளியன்று இப்படம் வெளியாகிறது…” என்றார்.

நடிகர் கார்த்தியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்-1’ படங்களின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்த ‘சர்தார்’ படமும் வெற்றியடைந்து ஹாட்ரிக் வெற்றியை கார்த்தி பெறுவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News