Friday, April 12, 2024

வருமான வரி கட்ட முடியாமல் தவிக்கும் கங்கனா ரணாவத்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கொரோனா நோய்ப் பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக இந்திய மக்கள் வேலையிழப்பு, பொருளாதார வீழ்ச்சி எனப் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள்.

இந்த நிலைமையில் வாழ்க்கையை ஓட்டுவதற்கே பணம் இல்லாத நிலையில் வரி கட்ட முடியாத நிலையில்கூட பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். இது போன்ற நிலைமை சினிமா நட்சத்திரங்களுக்கும் வந்துவிட்டதாம்.

சென்ற ஆண்டு வருமான வரியை முழுமையாகச் செலுத்தாததால் அதற்குரிய அபராத வட்டித் தொகையையும் சேர்த்து இந்தாண்டு கட்ட வேண்டியுள்ளது என்று புலம்பியுள்ளார் பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத்.

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “நான் தற்போது இந்தியாவில் அதிகமாக வருமான வரி செலுத்துபவராக இருக்கிறேன். எனது ஆண்டு வருமானத்தில் 45% வருமானத்தை வருமான வரியாக செலுத்துகிறேன்.

ஆனால், கடந்த ஆண்டு வேலை ஏதும் இல்லாத காரணத்தால் வாழ்வில் முதன் முறையாக எனது வருமான வரியின் பாதித் தொகையைக் கூட என்னால் செலுத்த முடியவில்லை. நான் தாமதமாக வருமான வரித் தொகையை செலுத்தியதால் அரசு மீதமுள்ள பணத்திற்கு வட்டியை விதித்துள்ளது.

ஆனால், நான் இதனை வரவேற்கிறேன். தனி ஒரு நபருக்கு காலம் கடினமானதாக இருக்கலாம். ஆனால் நாம் ஒன்றிணைந்து அந்த காலத்தைவிட கடினமாக இருப்போம்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசின் செல்லப் பிள்ளையாக இருந்து வரும் கங்கனாவுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் நிலைமையைச் சொல்லத்தான் வேண்டுமா..?

- Advertisement -

Read more

Local News