2003 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில், கமல்ஹாசன், மாதவன், கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “அன்பே சிவம்”. இதில் நல்லசிவம் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். முகத்தில் தழும்பு, ஓரு பெரிய மூக்கு கண்ணாடி ஆகியவற்றுடன் அடிப்பட்ட கால்களால் சாய்ந்து, சாய்ந்து நடக்கும் அந்த கதாபாத்திரத்தை எவராலும் மறக்க முடியாது.
அப்படம் குறித்து சுந்தர் சி சமீபத்தில் அளித்த வீடியோ பேட்டியில் பேசினார்.
அப்போது அவர், “அந்த படத்தில் கமல்ஹாசன் அணிந்திருக்கும் கண்ணாடியை அணிந்தால் நமக்கு தலை சுற்றும். ஆதலால் அந்த கண்ணாடியோடு மேட்ச் செய்வதற்கு கண்களில் லென்ஸ் போட்டுக்கொண்டார். இதில் இன்னொரு கஷ்டம் என்னவென்றால் அந்த லென்ஸை போட்டுக்கொண்டு தலையை குனிந்து கீழே பார்த்தால் தலை சுற்ற ஆரம்பித்துவிடும்.
அவர் அந்த கதாப்பாத்திரத்தில் நொண்டி நடக்கவேண்டும் என்பதற்காக ஒரு காலில் உயரம் அதிகமான ஷூவையும் இன்னொரு காலில் உயரம் குறைவாான ஷூவையும் போட்டுக்கொண்டார். அத்தனை சிரமப்பட்டு, ரிஸ்க் எடுத்து நடித்தார் கமல் ” என்றார் சுந்தர் சி.