தற்போது மணிரத்னம் இயக்கி உள்ள ‛தக்லைப்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் கமல்ஹாசன், விரைவில் இந்தியன்-3 படத்தின் மீதமுள்ள காட்சிகளில் நடித்து கொடுக்கப் போகிறார். இந்த நேரத்தில், ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிப்பதற்கும் தயாராகி விட்டார். கமலின் 237வது படமான இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
தற்போது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இயக்குனர்கள் அன்பறிவுடன் கமல்ஹாசன் நடந்து வருவது போன்ற ஒரு புகைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தற்போது இப்படத்தின் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.