ரோகின் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் ‘தீராக் காதல்’. சித்து குமார் இசையமைக்க, ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதி செய்கிறார்.
படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், ‘தீராக் காதல்’ படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிமுகப்படுத்தி உள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ், ‘ஆரண்யா’ என்ற கதாபாத்திரத்திலும் ஜெய், ‘கவுதம்’ என்ற கதாபாத்திரத்திலும் ஷிவதா, ‘வந்தனா’ என்ற கதாபாத்திரத்திலும் விருத்தி விஷால், ‘ஆர்த்தி’ என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
‘தீராக் காதல்’ திரைப்படம் மே 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.