வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
சமீபத்தில் ‘வாரிசு’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரஞ்சிதமே’ பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை நடிகர் விஜய்யுடன் இணைந்து எம்.எம்.மானசி பாடினார்.
அடுத்து நடிகர் சிலம்பரசன் பாடிய ‘தீ தளபதி’ பாடல் வெளியானது.
தற்போது படத்தின் மூன்றாவது பாடலான, ‘இட்ஸ் பார் யூ அம்மா’ நாளை மாலை வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கே.எஸ்.சித்ரா பாடியுள்ளார்.
இப்பாடலையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.