Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

‘அவரை’ நினைத்து கலங்கிய ஐசரி கணேஷ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் இவர் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்:

“என் அப்பா, நடிகர் ஐசரி வேலன் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது எம்.எல்.ஏ வாக இருந்தவர். ஒரு காலகட்டத்தில் அவர் ஐசரி வேலன் இறக்கும் தருவாயில் 2 லட்சத்துக்கும் மேலாக கடன் வைத்து விட்டு இறந்துவிட்டார். அப்போது அது மிகப்பெரிய தொகை. அதனால் பல பிரச்சினைகள்.

 ஆகவே,  உதவியை நாடி எம்ஜிஆரை அணுகினார் என் தாயார்.  எங்களுக்கு உள்ள கடன்கள்  உண்மைதானா என விசாரிக்க ஒரு தாசில்தாரையும் நியமித்தாராம் எம்ஜிஆர். உண்மை நிலவரம் தெரியவர அந்த தாசில்தாரிடமே 3 லட்சம் தொகையை கொடுத்து கடனை அடைக்க சொல்லிவிட்டார்.   2.70 லட்சம் ரூபாய் கடன் போக மீதி 30000 ரூபாயை எம்ஜிஆரிடம் கொடுக்கச் சென்னாறார் என் தாயார். ஆனால் எம்ஜிஆர்  நீங்களே செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என கொடுத்துவிட்டார்.

வாழ்க்கையில் அந்த சம்பவத்தை மறக்கவே முடியாது” என தன் நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் ஐசரி கணேஷ்.

- Advertisement -

Read more

Local News