நடன இயக்குனர், நடிகர், இயக்குனர்… என பன்முகத் திறமை கொண்டவர் பிரபுதேவா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். தமிழில் அதிக படங்களில் நடித்தும் உள்ளார். இந்நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனராக தெலுங்கு சினிமாவிற்கு மீண்டும் செல்கிறார் பிரபுதேவா.

கடைசியாக தெலுங்கில் 2007ல் சிரஞ்சீவியை வைத்து ‛ஷங்கர் தாதா ஜிந்தாபாத்’ என்ற படத்தை இயக்கினார். அதன்பின் இப்போது மீண்டும் தெலுங்கில் படம் இயக்க போகிறார். பக்கா கமர்ஷியல் படமாக உருவாகும் இதில் கதாநாயகனாக விஷ்ணு மஞ்சு நடிக்க போகிறாராம்.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது என்கிறார்கள். விஷ்ணு மஞ்சு சமீபத்தில் வெளியான கண்ணப்பா படத்தின் மூலம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழி ரசிகர்களுக்கும் தெரிந்த முகமாக மாறி உள்ளார்.