”ஹிட் 3” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்ற பிறகு, நடிகர் நானி, இயக்குனர் ஷௌரியுவுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஹாய் நன்னா’ திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றும் அடுத்த படமாவும் இது அமையும் என கூறப்படுகிறது.

இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இந்த படம் ஒரு பான்-இந்தியா படமாக உருவாகும் என்றும், அதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் துவங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு, ஷௌரியு நானியை சந்தித்து ஒரு காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதையை பகிர்ந்ததாகவும், அந்த கதை நானிக்கு மிகவும் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய காலங்களில் ஆக்ஷன் படங்களில் அதிகமாக நடித்துவரும் நானிக்கு, இந்த படம் ஒரு வித்தியாசமான மாற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, நானி ‘தி பாரடைஸ்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.