2009 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமாக கொடி ராமகிருஷ்ணா இயக்கத்தில், அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளியாகிய படம் ‘அருந்ததி’. அந்நேரத்தில் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், எதிர்பாராத விதமாக பல மடங்கு வசூலை ஈட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அந்த காலகட்டத்தில் இப்படம் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. தமிழிலும் இப்படம் அதே அளவிலான வெற்றியை பெற்று ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
தற்போது, 16 ஆண்டுகள் கழித்து, இந்தப்படம் ஹிந்தியில் மறுபடியும் ரீமேக் செய்யப்பட உள்ளது. ஹிந்தி பதிப்பை மோகன் ராஜா இயக்குகிறார் என கூறப்படுகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீ லீலா நடிப்பதாக பாலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.