Touring Talkies
100% Cinema

Wednesday, June 11, 2025

Touring Talkies

கைதி 2 படத்தில் இணைகிறாரா நடிகை அனுஷ்கா ஷெட்டி? உலாவும் புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“கைதி 2” திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜின் “எல்.சி.யு” யின் கீழ் உருவாகவுள்ள “கைதி 2” திரைப்படத்தில், அனுஷ்கா ஷெட்டி ஒரு லேடி கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னமும் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

தற்போது, லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடித்து உருவாகியுள்ள “கூலி” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையிடப்படவுள்ளது. “கூலி”யுக்குப் பிறகு, அவர் “கைதி 2” திரைப்படத்தின் பணிகளில் ஈடுபட உள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகவுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News