கன்னட நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி இயக்கிய ‘காந்தாரா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக வெளிவந்த ‘காந்தாரா சாப்டர் 1’ படமும் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், காந்தாரா படத்துக்கு முக்கிய பங்காக இருந்த தனது சொந்த கிராமமான குந்தபுராவுக்கே குடும்பத்துடன் குடியேற தீர்மானித்துள்ளார் ரிஷப் ஷெட்டி.

தனது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தது தனது மண்ணும், குலதெய்வக் கோயிலும் என நம்பும் அவர், பெங்களூருவிலிருந்த சொகுசு பங்களாவை விட்டு விட்டு கிராமத்திலுள்ள பூர்வீக இல்லத்திற்குச் செல்ல முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதில், “எனது மண்ணின் பெருமையை ‘காந்தாரா’ மூலம் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்திவிட்டேன். அந்த மண்ணுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் அங்கேயே சென்று வாழ தீர்மானித்தேன். என் குழந்தைகளையும் அங்குள்ள பள்ளியில் சேர்க்கப் போகிறேன். என் முடிவில் என் மனைவிக்கும் மகிழ்ச்சியே,” என்றார்.